அன்பரே உமக்கென்றும்
anbarae umakkendrum
அன்பரே உமக்கென்றும் துதி ஆனந்தம்! பரமானந்தம்!
1. நேசித்தீரோ பாசமாகத் தோஷம் என்னில் நீக்கிடவே நேயன் உம்மைப் போற்றிடுவேன் ஆசை உம்மேல் ஊற்றிடுவேனே - அன்பரே
2. தேடினீரோ பாவியென்னைப் பார்தலத்தின் தாழ்விடத்தில் சேற்றினின்று தூக்கினீரோ சேயனென்றும் பேருமிட்டீரோ - அன்பரே
3. வானலோகத் தேனிலரிய தானகீதம் வாயிலீந்தே தேனே அன்பில் தேங்கிடற்கே ஆன மகிமையை அளித்தீரே - அன்பரே
4. பாளையத்தின் வேறு தான கோலமுற்ற காட்சி கண்டு ஆவலாய் அன்பில் ஏழை தாவி நிற்க ஆவியீந்தீரே - அன்பரே
5. பூதலத்தோர் தூஷித்தாலும் காதலா நீர் ஆன கோலம் ஆயிரங்களில் சிறப்பே அண்ணலே யென் ஆசையீந்தேனே - அன்பரே
6. தேவலோக ஜீவ தருவே! தாகந்தீர்த்த ஜீவ நதியே! நேசமாயும் அன்பர் உள்ளம் நீடூழி காலமே களிப்பாரே - அன்பரே