அன்பரே மகா அன்பரே
anbarae magaa anbarae
அன்பரே மகா அன்பரே உந்தன் அன்பாலே அரவணைத்தீரே
அன்பாலே பாவம் தீர்த்தீரே என் அன்பே அன்பே பேரன்பரே
1. உம்மைக்கண்ட நான் விட்டுப் போவேனோ இந்த மண்டலமே பின்னால் செல்வேனோ - 2 உம்மோடல்லா திருப்பேனோ - 2 என் அருளே - அருளே - அருள் நிறைத்தேவா
2. விட்டவரே விண்ணை விட்டவரே என்னை மீட்டுக் கொள்ளவே விட்டவரே மட்டற்ற தூதரின் துதி பெறுவோரே - 2 துதியே - துதியே - துதியுமக்கே தான்
3. வருவீரே வேகம் வருவீரே என்னை மருங்கணைத்திட வருவீரே வான தூதர்கள் தொனியோடே - 2 நான் வருவேன் - வருவேன் - உம்மோடேதான்
4. தொல்லைகள் வெகு துன்பங்கள் எந்தன் அல்லல்கள் முற்றும் அறிவீரே -2 அற்புதமாய் என்னைக் காப்பீரே - 2 - நான் அல்லும் - பகலும் -துதிப்பேனே