அன்பரே அன்பரே
anbarae anbarae
அன்பரே அன்பரே உம்மைப் போற்றிப் பாடிடுவேன் ஆபத்துக் காலத்தில் உதவிடும் தெய்வமே உம்மைப் புகழ்கின்றேன்-2
அல்லேலூயா ஆனந்தமே அளவில்லா பேரின்பமே -2
சத்துரு முன்பாக பந்தியைத் தந்தீரே என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்தீரே -2 பாத்திரம் நிரம்பியே வழிய செய்தீரே (2)
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கின்றீர் - அமர்ந்த தண்ணீர் அண்டை கொண்டு செல்கிறீர் நீதியின் பாதையில் நித்தமும் நடத்தினீர்
மரண இருளிலே நடந்தாலும் பயப்படேன் தேவரீர் என்னோடு கூடவே வருகிறீர் கோலும் தடியும் என்னை தேற்றுமே-உம்