அன்பர் இயேசுவின்
anbar yesuvin
அன்பர் இயேசுவின் அடிகள் இதோ இன்ப சீயோனில் நிற்க தேவ மகிமை ஜொலிக்கும் நகரே ஜோதி பிதா உயர் தாபரமே
1. மீட்கப்பட்டார் சீயோனில் இயேசுவுடன் மாட்சியுற்றே வருவார் ஆட்டுக்குட்டி அவர் சொந்தமாக யிவர் ஆனதாலே என்றும் இணைந்து நிற்கிறார் - அன்ப
2. பூவின் முதற்பலனால் சீயோனுக்காய் மீட்கப்பட்ட கூட்டத்தாரே ஊரில் ஒருவராய் இடத்தில் இருவராய் பாரில் சீயோன்தனில் பிறந்தோர் இவரே - அன்ப
3. வேதம் வரும் சீயோனாய் ஜீவித்தவர் தேவ சிகரமுமாமே ஆய அரண்களாய் துாய துருகமாய் நேய நகரமாய் சிறந்து நிற்பவர் - அன்ப
4. மாறா அபிஷேகத்தால் சீயோனிலே ராஜன் நிற்பதால் சீயோன் அகிலமும் தேவ நதியாக ஜீவன் பெருகுதே யுகா யுகங்களாய் - அன்ப
5. சீயோன் வெளிப்படும் வேளையிது வேலையும் தீர்ந்தாலே தந்தை முகங் கண்டு சிந்தை மகிழ்ந்தோராய் சந்ததமே சேவை செய்தே வீற்றிருப்போம் - அன்ப