அன்பனே அடியார்மேல்
anbanae adiyaarmel
அன்பனே அடியார்மேல் - ஆசி பொழிய வந்திடும்
1. ஆவியின் பெரு மாரி பொழிய, அன்பே அருள் புரியும் உன்னத பெலத்தால் தேவா உள்ளம் நிறைத்திடுமே - அன்
2. அற்புத அடையாளமதினால், வார்த்தை ஸ்திரப்படுத்தும் பேயை ஜெயித்ததினால் தேவா நோய்கள் நீங்கிடவே - அன்
3. கறை, திரை முதலான பாவம், சபையினின்றகல் குறைகளகற்றிடுமே தேவா சிறந்திலங்கிடவே - அன்
4. பாரில் உம்மைத் தேவன் என்று ஜாதிகளறிய பூர்வ நாட்களை போல் தேவ பக்தரை எழுப்பும் - அன்
5. தியாகமே தம் மேன்மையாக, நேர்ந்த தாசர்கள் நிறைவாய் ஆவியால் தேவா அபிஷேகித்திடுமே - அன்