அன்பே அன்பே கல்வாரி அன்பே
anbae anbae kalvaari anbae
அன்பே அன்பே கல்வாரி அன்பே என்பாவம் போக்கிய அன்பே மாறாத அன்பு அசையாத அன்பு இயேசுவின் தூய அன்பு
1. என்னை மீட்கத் தாகம் என்றீர் எனக்காக ஜீவன் தந்தீர் பரலோகம் துறந்தே இறங்கி வந்தீர் பரிசுத்தமாக்கி விட்டீர்
2. முள் முடி ஏற்றுக் கொண்டீர் சிந்தை எல்லாம் மாற்றி விட்டீர் காயத்தை ஏற்று சுகத்தை தந்தீர் என் பாவம் போக்கி விட்டீர்
3. சிலுவையில் மரித்ததினால் என்னை நீதிமானாய் ஆக்கி விட்டீர் உயிரோடு காத்தீர் ஊழியம் தந்தீர் நாள் தோறும் நடத்துகிறீர்