அன்பான இயேசுவே அழகான இயேசுவே
anbaana yesuvae azhagaana yesuvae
அன்பான இயேசுவே அழகான இயேசுவே உம்மோடு வாழவே என்னுள்ளம் ஏங்குதே - 2
1. உலகமே மாயயே உம் அன்பு போதுமே உன்னதரே உம்மை காண உள்ளம் ஏங்கிடுதே - 2
2. கல்வாரி காணும் போதும் கல்மனம் உருகுதே கள்ளமில்லா உந்தன் அன்பால் காயம் ஆறிடுதே - 2
3. வருகையில் சேர்த்திடுவீர் மறுரூபம் ஆக்கிடுவீர் மணவாளன் உந்தன் அன்பில் மகிழ்ந்தே மறந்திடுவேன் - 2