அன்பான இயேசுவே
anbaana yesuvae
அன்பான இயேசுவே அபிஷேக நாதரே உம்மாலே தான் நாங்கள் வாழ்கிறோம் உம்மாலே தான் நாங்கள் வாழ்கிறோம் -2
திரு ரத்தம் சிந்தி நீர் பாவங்கள் கழுவி நீர் -2 பரிசுத்த வாழ்வுக்கு பங்காக்கினீர் பரமபிதாவின் பிள்ளையாக்கினீர் -2
கண்ணீரை போக்கி நீர் களிப்பாக மாற்றி நீர் -2 கவலைகள் துக்கங்களை நீக்கி நீர் கண்மணிபோல் எம்மை காக்கிறீர் -2
அபிஷேகம் செய்தீரே அடிமையை நினைத்தீரே-2 அன்பாலே நிரப்பிநீரே என் இயேசுவே அனலாக மாற்றிநீரே என் இயேசுவே -2
பொன்முகம் காண்கிறோம் பூரித்துப் போகிறோம் -2 இன்னல்கள் நீங்கி மகிழ்வாகிறோம் இன்பத்தினாலே துதி பாடுவோம் -2