அன்பாம் இயேசுவை அன்பின் சொரூபியை
anbaam yesuvai anbin soroobiyai
1. அன்பாம் இயேசுவை அன்பின் சொரூபியை என்றென்றும் துதிப்பேன் - 2 அன்பில் நிறைந்தோர் அவனியில் உதித்தோர் மானிடரை இரட்சித்தோர் - 2
2. மானிலத்தில் வந்த மாபெரும்அன்பே என்றென்றும் துதிப்பேன் - 2 மகிதலத்தை விட்டு மனுஷனாய் அவதரித்த மாபெரும் அன்பே - 2
3. அன்பே அருளே உயிரே உறவே என்றென்றும் துதிப்பேன் அன்பின் நிறைவே அரும்பெரும்பொருளே பொன்னே பூமானே - 2
4. அன்பின் ஆழியே ஆனந்தக் கடலே என்றென்றும் துதிப்பேன் - 2 அன்பின் பெருக்கே வற்றா சமுத்திரமே வாடாத அன்பே - 2
5. மாறா அன்பே குறையா அன்பே என்றென்றும் துதிப்பேன் - 2 தீராதன்பே அழியாதன்பே ஒழியாத அன்பே - 2
6. ஆழம் நீளம் அறியா அன்பே என்றென்றும் துதிப்பேன் - 2 அகலம் உயரம் அறியா அன்பே எட்டாத அன்பே - 2
7. ஸ்தோத்திரித்து உம்மைப் புகழ்ந்து போற்றி என்றென்றும் துதிப்பேன் - 2 ஆனந்தமாக அவனியில் உம்மை என்றென்றும் துதிப்பேன் - 2