அன்பால் என்னை நேசித்தீரே
anbaal ennai nesitheerae
அன்பால் என்னை நேசித்தீரே அன்பால் என்னை அரவணைத்தீரே-2
தாயின் கருவில் தெரிந்துகொண்டீர் தகப்பனைப் போல சுமந்தீரே -2 துரோகம் செய்த வேளையிலும் கிருபையால் என்னை ஏற்றுக்கொண்டீர்-2
பரலோக மகிமையை துறந்து வந்தீர் பாவியாம் என்னை நீர் மீட்டெடுத்தீர் மனுக்குலம் மீட்ட இம்மானுவேலே மகிமையின் வாழ்க்கையை எனக்களித்தீர்
வனாந்தர வேதனை நீர் அறிந்தீர் அழுகுரல் கேட்ட ஏல்ரோயீ காண்கின்ற தேவன் என் தேவன் காலமெல்லாம் என்னைக் காத்தீரே
ஏல்ரோயீ நீர் தானே என்னைக் கண்டீரே நன்றி ஐயா ஆராதனை இயேசுவே ஆராதனை என் தெய்வமே