அன்பாக அன்பாக இருக்கின்றார் தேவன்
anbaaga anbaaga irukkindraar devan
அன்பாக அன்பாக இருக்கின்றார் தேவன் அவரிடம் வந்திட்டால் அளிப்பாரே அளிப்பாரே ஜீவன்-2 தம்மிடம் வருவோரை தள்ளாத தேவன் தம் கரம் விரித்து அளித்தாரே ஜீவன்
சிலுவையில் வழிந்திடும் ஓர் ஊற்று உன் ஆத்தும தாகத்தை தீர்த்திடுமே -2 பாவ கறைகளை கழுவிடுமே -2 பரிசுத்த நகரத்தில் சேர்த்திடுமே வருவாயே...
உலகமும் வெறுத்து தள்ளிடலாம் உன்னில் உள்ளதை பறித்து உதறிடலாம் உன்னதர் இயேசுவை தள்ளிவிட்டால் உனக்கொரு புகலிடம் எதுவுமில்லை உணர்வாயே ...