அநாதியாய் எந்தன் அடைக்கலம்
anaadhiyaay endhan adaikkalam
அநாதியாய் எந்தன் அடைக்கலம் நீரே அநாதி நேசத்தால் நேசித்தோர் நீரே அநாதி சிறகின் மறைவில் வந்தடைந்தே அநாதி காலமாய் சுகிப்பேனே
ஜீவனின் பெலனும் இயேசுவே நீர் சீயோனில் இராஜனும் இயேசுவே நீர் சுத்திகரிப்பீரே இயேசுவே உமக்காய் சேவிக்க எந்தன் ஜீவ காலமெல்லாம்
வறண்ட கானகமாம் இந்த புவியே இருண்ட பாதையே நான் கடந்திடவே நிறைவின் தேவனே குறைகளகற்றுவீர் நிறைந்த நதியாய் தாகந்தீர்ப்பீர் ஜீவனின்
சிலுவை நோக்கியே உம் அடி தொடர வல்லமை தாருமே இயேசுவே எனக்கே நேசிக்க இகத்தில் வேறாரும் அறிகிலேன் நீரன்றி பரத்தில் யாருமில்லை
தேவனின் சித்தமே செய்ய வந்தனீரே தேகமாம் திரையதை ஒழித்து சென்றனரே நாதனே உமது சித்தந்தனை செய்யவே வேதனே அருள்வீர் கிருபையே
என் கண்கள் நோக்கிடுதே எப்போ வருவீர் என் ஆவல் தீருமே உம்முகம் காண்க மகிமை இலங்கும் சீயோனின் மலையதில் மாட்சியில் இயேசுவோடாட்சி செய்வேன்