அநாதி சிநேகத்தால்
anaadhi sinegathaal
அநாதி சிநேகத்தால் சிநேகித்தழைத்தே அன்பின் காருண்யத்தால் இழுத்துக் கொண்டீர் அன்பு கூறும் உம்மாலே முற்றும் ஜெயங்கொள்ளவே அளவில்லா உமதன்பை ஊற்றுவீர்
1. பாவ உளைசேற்றிலே நோய்களினால் பதறி அழுகையில் துாக்கியெடுத்தீர் பட்சமாய் என்னையும் மன்னித்த பேரன்பிற்காய் பரிசுத்தமாக ஜீவித்திடுவேன் - அநாதி
2. கோர பாடுகளையும் சகித்தோராய் கொடூர மரணம் குருசில் ருசித்தீர் கரையே இல்லாத கல்வாரியின் அன்பினை கண்டு நான் அன்பிலே நடந்திடுவேன் - அநாதி
3. காற்றினாலே அலைபோல் அடிபட்டு கலங்கி அலைந்ததாம் நீசனென்னையும் அப்போஸ்தலரோடே சபைதனில் சேர்த்ததால் அன்பினாழமதை உணர்ந்தறிவேன் - அநாதி
4. நித்தம் படைக்கப்பட்டு தனிமையில் நிந்தையா தவிக்கையில் தேற்றியணைத்தீர் நேசித்து என்னை யென் நன்மைக்காய்ச் சிட்சிப்பதால் நிதம் மகிழ்ந்தும்மில் நிலைத்திருப்பேன் - அநாதி
5, பாடுகளின் பாதையில் சோர்கையிலே பறந்ததென்மேலுந்தன் நேசக்கொடியே தேவ புத்திரர் வானில் உம்மைக் சந்திக்க தேவ பெலத்தினால் நிறைந்திடுவேன் - அநாதி