அநாதி தேவனே அன்பின் தேவனே
anaadhi devanae anbin devanae
அநாதி தேவனே அன்பின் தேவனே அநாதி சிநேகத்தால் அழைத்த தேவனே
ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயித்தேன் நானும் அல்லேலூயா
வனாந்திரத்தில் வழியையும் அவாந்திரத்தில் ஆறுகளை உண்டாக்கி புதிய பாதையை புதிய ஆண்டில் காட்டி நடத்தி காத்திடுவீரே
அன்பின் கயிறுகளால் கட்டியிழுத்து காருண்யத்தால் என்னை பெரியவனாக்கும் கண்ணை என் மேல் வைத்து கண்ணின் மணிபோல் காத்தீரே
பரிசுத்தமானவரே பரிசுத்தப்படுத்தி நீரே தூய ஆவியானவரே தூய்மைப்படுத்தி நீரே வாக்குத்தத்தம் தந்து வாழ்வளித்தீரே வருகையில் என்ன சேர்த்துக் கொள்வீரே