அநாதி தேவன் தன் அநாதி ஸ்நேகத்தால்
anaadhi devan than anaadhi snegathaal
அநாதி தேவன் தன் அநாதி ஸ்நேகத்தால் என்னை சிநேகித்தாரே அவரது காருண்யத்தால் என்னை இழுத்துக் கொண்டாரே
என் தாயின் வயிற்றினில் நான் உருவாகு முன்னமே என்னை அறிந்தவர் அவரே என் பாவம் போக்கிட என் சாபம் நீக்கிட எனக்காய் ஜீவன் தந்த தெய்வம் அவரே
என்னை நேசித்ததால் நான் வாழ்ந்திருக்கிறேன் என்னை நேசித்ததால் நான் மகிழ்ந்திருக்கிறேன்
என் பாவம் இரத்தாம்பர சிவப்பாக இருந்ததை பஞ்சைப்போல் மாற்றியதவரே மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவாய் என் பாவம் விலக்கியதவரே