அநாதை ஆவதில்லை
anaadhai aavadhillai
அநாதை ஆவதில்லை - 4 இயேசு என்னை தேடி வந்தார் ஜீவன் தந்தார் ஏற்று கொண்டார் - 2 அநாதை ஆவதில்லை
1. தாயின் வயிற்றில் தெரிந்துகொண்டீர் தந்தை போல் என்னை சுமந்துவந்தீர் தலைவன் ஆனீர் தோழனும் ஆனீர் தனிமை எனக்கு இனி இல்லை - 2
2. உலகம் என்னை தள்ளிடலாம் உறவுகளும் வெறுத்திடலாம் உன்னதர் நீர் என் உறைவிடம் ஆனீர் உயிரில் கலந்தீர் இனிமை தந்தீர் - 2
3. அகதியாய் நீ வாழ்ந்திடலாம் ஆதரவின்றி தவித்திடலாம் படைத்த தேவன் மறந்திடவில்லை உண்மையாய் உன்னை உயர்த்திடுவார் இனி கண்ணீர் தேவை இல்லை உந்தன் நிலைமை மாறும் உண்மை அநாதை யாரும் இல்லை