அம்மா அம்மா அம்மா
ammaa ammaa ammaa
அம்மா அம்மா அம்மா என்று கூப்பிடவா அப்பா அப்பா அப்பா என்று கூப்பிடவா -2
அம்மாவும் நீரே அப்பாவும் நீரே எனக்கு (என் நண்பனும் நீரே எனக்கு எல்லாமும் நீரே)-2
அம்மான்னு கூப்பிட ஆசை தான் உம்மை அப்பான்னு கூப்பிட ஆசை தான்-2 உலகில் யாருண்டு உம்மை போல் யாருமில்லை-2
உம்முடைய வீட்டில் இருக்க ஆசை தான் நான் உம்மோடு உறவாட ஆசை தான்-2 வேறொரு ஆசை இல்லை நீர் தான் என் ஆசை-2
உம் நாமம் சொல்ல எனக்கு ஆசை தான் உம் விருப்பம் செய்ய எனக்கு ஆசை தான்-2 உமக்காய் காத்திருப்பேன் உயிர் வாழும் நாளெல்லாம்-2
உம்மை அம்மா அம்மா அம்மா என்று கூப்பிடுவேன் உம்மை அப்பா அப்பா அப்பா என்று கூப்பிடுவேன்-2 அம்மாவும் நீரே அப்பாவும் நீரே எனக்கு நண்பனும் நீரே எனக்கு எல்லாமும் நீரே-3