அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே
amaidhiyin thoodhanaay ennaiyae maatrumae
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே அன்பனே இறைவனே என்னிலே வாருமே அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே
பகைமை உள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும் - 2 வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பபு வழங்கவும் கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும்
தளர்ச்சி ஓங்கும் பொழுது மனதிடம் தழைக்கவும் - 2 இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும் துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும்
ஆறுதல் அன்பை அளித்து புரிதலை வளர்க்கவும் - 2 கொடுப்பதில் நிறைவைக் கண்டு மன்னித்து வாழவும் தன்னலம் ஒழித்துப் புதிய உலகம் படைக்கவும