அமைதியின் தெய்வமே இறைவா
amaidhiyin theyvamae iraivaa
அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே அருள்வாய் அருள்வாய் யாம் ஏங்கித் தேடுகின்ற அமைதி அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி
நீதிப்பாதையில் நடப்பவர் சுவை அமைதி அமைதி தியாகச் சிகரத்தில் நிலைப்பவர் பெறுவது அமைதி அமைதி அன்பு மொழியை விதைத்திடுவோர் அருளின் பயிரை அறுத்திடுவார் ( 2 ) அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி - 2 - 2
உறவைத் தேடியே உரிமைகள் காத்தால் அமைதி அமைதி உயிரை மதித்தால் உண்மையில் நிலைத்தால் அமைதி அமைதி ( 2 ) ஒங்கும் வன்முறை ஒழித்திடுவோம் வீங்கும் ஆயுதம் களைந்திடுவோம் ( 2 ) அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி