அமைதி தேடி அலையும் நெஞ்சமே
amaidhi thedi alaiyum nenjamae
அமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே ( 2 ) நிலையான சொந்தம் நீங்காத பந்தம் - 2 அவரின்றி வேறில்லையே
போற்றுவேன் என் தேவனே பறைசாற்றுவேன் என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே ( 2 ) காடுமேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே
இறைவனே என் இதயமே - இந்த இயற்கையின் நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே ( 2 ) பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய் என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே