அல்லேலூயா துதி பாடிடுவேன்
alleluya thudhi paadiduven
அல்லேலூயா துதி பாடிடுவேன் உம் கிருபை என்றும் நினைத்திடுவேன் பரிசுத்தரே தயை உள்ளவரே துதி கன மகிமைக்கு பாத்திரரே
1. சகலத்தையும் சிருஷ்டி செய்தவரே சகலத்தையும் பாதுகாப்பவரே சகலரிருலும் மிக உன்னதரே சர்வ வல்லமை ஞானம் உள்ளவரே
2. கருணையும் இரக்கம் உள்ளவரே மனமிரங்கும் மஹா பிரபுவே அநாதி சிநேகத்தால் அணைப்பவரே மாறாத ஸ்னேகம் பகர்ந்தவர்
3. ஆதியும் அந்தமும் ஆனவரே கன்மலையும் என் கோட்டையும். வழியும் சத்தியமும் ஆனவரே இரட்சணிய மார்க்கம் நீர் மாத்திரமே
4. சிலுவை சுமந்து தளர்ந்தது எனக்காய் கோரமாம் சிட்சை அதுவும் எனக்காய் முள்முடி சூடிய தும் எனக்காய் ஜீவன் தந்ததுவும் எனக்காய்