அல்லேலூயா ஸ்தோத்திரம்
alleluya sthothiram
அல்லேலூயா ஸ்தோத்திரம் தடைகள் நீக்கிடுவார் தாமே தலைவர் இயேசு ஜெயமாய் நடத்துவார்
உத்தம ராஜனே உன்னத தேவனே சேனை அதிபராய் முன்னே செல்கிறார்
பயந்து கலங்காதே அமர்ந்து காத்திரு நீதியின் தேவனே நித்தமும் நடத்துவார்
என் மீட்பர் வல்லவர் சேனையின் அதிபராம் தமது புயத்தினால் இளைப்பாற நடத்துவார்
என் கர்த்தர் பரிகாரி காயங்கள் ஆற்றுவார் செட்டையின் நிழலினால் ஆரோக்யம் நல்குவார்