அல்லேலூயா பாட்டுக்காரங்க
alleluya paattukkaaranga
அல்லேலூயா பாட்டுக்காரங்க நாங்களெல்லாம் இயேசப்பாவின் சொந்தகாரங்க சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க இயேசு அப்பா அன்பினிலே வந்து பாருங்க இதயத்தை தந்து பாருங்க அம்மா வந்து பாருங்க ஐயா கொஞ்சம் கேளுங்க
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வந்தேங்க - நான் பாடாத பாட்டெல்லாம் பாடி வந்தேங்க அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா தேடாத தெய்வத்தை எல்லாம் தேடி வந்தேங்க தேடி வந்த இயேசு ராஜா பாடி வந்தேங்க
மாளிகை மாடங்களை கேட்கவில்லைங்க உன் பொன்னும் பொருளையும் தேவையில்லைங்க கெட்டுப்போன இதயத்தையே கேட்கிறாருங்க உன் உள்ளத்திலே இயேசு வாழ துடிக்கிறாருங்க
பட்டம் பதவி எல்லாம் பறந்து போகுங்க உன் கெட்ட குணங்களெல்லாம் மாறி போகுங்க நல்ல வழி தருபவர் இயேசு தானுங்க அந்த வழி வேண்டுமானால் வந்து பாருங்க