அல்லேலூயா பாட்டு பாடு
alleluya paattu paadu
அல்லேலூயா பாட்டு பாடு ஆர்ப்பரித்து சத்தம் போடு தடைகள் நீங்கிடும் கட்டுகள் அறுந்திடும் நுகங்கள் முறிந்து போகுமே மன்னன் இயேசு முன் செல்வாரே
இந்த பட போதுமா இன்னுங்கொஞ்சம் வேணுமா யூத ராஜ சிங்கமாம் சேனைகளின் தேவனாம் -2
பார்வோன் படைகள் பயந்து போனதே பயந்து போனதே - ஆமா பயந்து போனதே பாதி வழியில் அமிழ்ந்து போனதே அமிழ்ந்து போனதே - ஆமா அமிழ்ந்து போனதே
உம் வல்ல செயல்கள் சொல்லி துதிப்பேன் நன்மைகள் ஒவ்வொன்றாய் " எண்ணித் துதிப்பேன் - 2
ஆமானின் ஆட்டம் அடங்கி போனதே அடங்கி போனதே - ஆமா அல்லேலூயா கூட்டம் பெருகிப் போனதே பெருகிப் போனதே - ஆமா
சாத்தானின் சதிகள் அழிந்து போனதே அழிந்து போனதே - ஆமா சிலுவையில் இயேசு ஜெயமெடுத்தாரே ஜெயம் எடுத்தாரே - ஆமா