அல்லேலூயா பாடு ஆர்ப்பரித்து
alleluya paadu aarpparithu
அல்லேலூயா பாடு ஆர்ப்பரித்து ஆடு ஆலயமே நீ வாழும் வீடு தேவ ஆலயமே நீ வாழும் வீடு
ஆ...அல்லேலூயா ஆ....அல்லேலூயா
சொல்லி சொல்லி அவர் புகழ் பாடு இயேசு அள்ளி அள்ளித் தந்தார் அதை தேடு தள்ளித் தள்ளி சென்றால் வரும் கேடு மனம் துள்ளி துள்ளி மகிழ்ந்தாடு
தீமைகளை நன்மையினால் வெல்லு தீயோர் வழிகளை விட்டு தூரம் செல்லு உள்ளதையே உள்ளதென்று என்று சொல்லி உன்னில் இல்லாததை இல்லை என்று சொல்லு
பாடப்பாட ராகம் சுவையாகும் தாளம் போட போட ஆவி அசைந்தாடும் ஆட ஆட அல்லல் பறந்தோடும் நீயும் தேட தேட தேவ கிருபை கூடும்