அல்லேலூயா பாடு! ஆனந்தமாய் கூடு!
alleluya paadu! aanandhamaay koodu!
அல்லேலூயா பாடு! ஆனந்தமாய் கூடு! இன்பமாய் நீ ஓடு! தேவன் பாதம் தேடு! நம் ராஜாதி ராஜா நல்லவர் நம் தேவாதி தேவன் வல்லவர்
செங்கடல் தனை நடுவாக பிரித்த நம் தேவாதி தேவன் நல்லவர் சீறி வரும் கொந்தளிப்பை அமர்த்திட்டவர் நம் ராஜாதி ராஜா வல்லவர் பங்கமின்றி தம் ஜனத்தை பாதுகாக்கவே பாதை காட்டி சேதமின்றி நடத்திட்டவர்
பஞ்சத்திலே எலியாவுக்கு அப்பம் கொடுத்து பசி தாகம் தீர்த்திட்டவர் கொஞ்ச பெலன் இருந்தும் தம் வல்லமையாலே தேவசித்தம் செய்ய நடந்திட்டவர் மிஞ்சும் தம் கிருபையாலே இரக்கம் காட்டி தஞ்சம் என தாபரமாய் வந்து நின்றவர்