அல்லேலூயா பாடிடு அகமகிழ்ந்த
alleluya paadidu agamagizhndha
அல்லேலூயா பாடிடு அகமகிழ்ந்த ஆடிடு அன்பர் இயேசுவை போற்றிடு - நீ ஆசீர்வாதம் பெற்றிடு அல்லேலூயா பாடிடு
உன்னத அழைப்பு அறிந்திடு உலககவலை மறந்திடு உண்மையாய் ஊழியம் செய்திடு கர்த்தரை தெய்வம் என்று சொல்லிடு -2
சாத்தானை காலில் மிதித்திடு பாவத்தை கண்டு ஓடிடு மண் பொன் ஆசை வெறுத்திடு ஜீவ பாதையில் நடந்திடு -2
தேவ சத்தம் கேட்டு தேவ சித்தம் செய்திடு இயேசுவைப் போல மாறிடு நீ ஜீவகிரீடம் பெற்றிடு -2
இன்பர் ஏசுவை நோக்கிடு இன்னல் நீங்க வேண்டிடு என் உயிர் தந்தார் மகிழ்ந்திடு இந்தியா இயேசுவுக்கே ஜெபித்திடு -2