அல்லேலூயா கர்த்தரின் ஊழியரே
alleluya kartharin oozhiyarae
அல்லேலூயா கர்த்தரின் ஊழியரே துதியுங்கள் கர்த்தரின் ஜனங்களே - இன்று முதல் என்றென்றைக்கும் துதித்திடுவோம்
சூரியன் உதிக்கும் திசை தொடங்கி அது அஸ்தமிக்கும் திசை வரைக்கும் கர்த்தர் நாமம் எந்நாளும் உயர்த்தப்படும்
கர்த்தர் எல்லா ஜாதிகளின் மேல் உயர்ந்தவர் - அவரின் மகிமை வானங்களின் மேல் உயர்ந்தது
சிறியவனை அவர்புழுதியிலிருந்து தூக்குகிறார் - எளியவனை அவர் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்
கர்த்தர் உனக்கு பெரிய காரியம் செய்வார் - ஆறுதல் தந்து அதிசயமாய் உன்னை நடத்துவார்