அல்லேலூயா அல்லேலூயா அல்ப கலாய்
alleluya alleluya alba kalaay
அல்லேலூயா! அல்லேலூயா! அல்ப கலாய் நாம் ஆர்ப்பரிப்போம்
1. ஆதரையில் அவர் பாதை தனில் ஆதரவாய்க் கண்ணோக்கியதால் அனுதினமும் பாடிடுவோம் அன்பரின் கிருபையதை நினைந்தே
2. அகிலம் தர சமாதானம் அருள் அருணோதயம் நம்மைச் சந்தித்ததால் ஆவலுடன் ஸ்தோத்திரிப்போம் ஆருயிர் இயேசுவின் அடிபணிந்தே
3. தேவனின் புத்திரராகிடவே தேவன்பை உள்ளத்தில் ஊற்றியதால் துதித்திடுவோம் தூயவர் துங்கவன் இயேசுவை நிதம் நினைந்தே
4. சோதனை பாடுகள் நிந்தைகளில் சோர்ந்திடா தெமக்குப் பெலனளித்தே தாங்கினாரே தன் கரத்தால் தற்பரன் இயேசுவை நிதம் நினைந்தே
5. வருகையின் நம்பிக்கையால் மகிழ்ந்தே வாழ்ந்திட எமக்குக் கிருபையீந்தார் எந்த வேளை வந்திடினும் சந்திக்க ஆயத்தமாகிடுவோம்