அல்லேலூயா அல்லேலூயா
alleluya alleluya
அல்லேலூயா, அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவேன்
அல் பகல் ஆர்ப்பரித்து அன்பரோடக மகிழ்வோம் - அல்
1. கண்ணே ! மணிப்புறாவி! காதல் சீயோனின் மகளே! கையில் பதித்தேனுனைக் கானக லீலிப் புஷ்பமே - அல்
2. தாய் மறந்தாலும் சேய் நான் மறவேன் என்றவரே தற்பரா உந்தன் வாக்கால் நற்பரனின் பாதம் வந்தேன் - அல்
3. சுரர் வணங்கு நிதி சுத்தருக்கே நிதமும் துதி மறுரூபமான நிதி நம்மை மீட்ட புண்ணிய நதி - அல்
4. தூதர்கள் ஆர்ப்பரிக்க, சேராபீன்கள் ஸ்தோத்தரிக்க பாவலர்கள் துதிக்க பரிசுத்தரின் மனங்களிக்க - அல்
5. மாமிச மடங்கு நிற்க, வல்ல சர்ப்பம் ஒடுங்கி நிற்க நியமிக்கப்பட்டவர்களை நிறுத்திடுவேன் இமைப்பொழுதில் - அல்
6. கண்ணீர் கவலையில்லை நண்ணி வரும் நோயுமில்லை கன்னியர் அருந்திடுவார் மாதம் ஒரு புதுக்கனியை - அல்
7. வெற்றிக் கொடி பிடித்து வெண்ணங்கி தான் தரித்து சுற்றி நின்று பாடிடுவேன் நெற்றியில் புது நாமமுள்ளோர் - அல்