அல்லேலூயா (3) தோத்திரம்
alleluya (3) thothiram
அல்லேலூயா! (3) தோத்திரம் அல்லேலூயா! (3) தோத்திரம்.
1. பரம பிதாவே உமது நாமத்திற்கு தோத்திரம் பரிசுத்தமாக்கப் படவேணும் அது தோத்திரம்.
2. பூலோகித்தின் ராஜ்யங்கள் உமக்குள்ளது தோத்திரம் பூலோகில் உமது ராஜ்யம் வரவேணும் தோத்திரம்.
3. பரலோகில் உமது சித்தம் செய்யப்படும் போலவே பூலோகில் செய்யப்பட வேணும் என்றும் தோத்திரம்.
4. அன்றன்றுள்ள ஆகாரம் உடைக்காகவும் தோத்திரம் இன்றும் எங்கள் படி அளந்து போஷிப்பியும் தோத்திரம்.
5. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கும் போல் எங்கள் கடன்களை எமக்கு மன்னியும் தோத்திரம்.
6. சோதனைக்குள் எங்களைப் பிரவேசிக்கப் பண்ணாமல் சோதனைக் காரனின்றும் ரட்சியும் தோத்திரம்.
7. ராஜ்யமும் வல்லமையும் உமக்குள்ளது தோத்திரம் மகிமையும் என்றென்றைக்கும் உமக்குள்ளது தோத்திரம்.