அல்பா ஒமேகா என் தேவனே
albaa omegaa en devanae
அல்பா ஒமேகா என் தேவனே ஆராதனை உமக்கே ஆதியும் அந்தமும் ஆனவரே ஆராதனை உமக்கே
ஆராதனை துதி ஆராதனை ஆயிரம் ஆயிரம் ஆராதனை பரிசுத்த ஆராதனை பரிசுத்தர் பரிசுத்த ஆராதனை
சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தீர் மகிமையின் மேகத்தில் துணையாக வந்தீர் துணையாளரே துணையாளரே துணையாளரே துணையாளரே சிறகினில் சுமர்ந்தவரே - என்னை
ஆபத்து காலத்திலே துணையாக வந்தீர் அலைந்த என் வாழ்வுக்கு நிழலாக தொடர்ந்தீர் அன்பானீரே அன்பானீரே அன்பானீரே அன்பானீரே அன்பான என் இயேசுவே - எனக்கு
கன்மலையை பிளந்து தாகத்தை தீர்த்தீர் மன்னாவை பொழிந்து பசியாற்றி மகிழ்ந்தீர் வழியானீரே வழியானீரே வழியானீரே வழியானீரே இருளுக்கு ஒளியானீரே - எனது