அளவிட முடியாத அன்பாலே
alavida mudiyaadha anbaalae
அளவிட முடியா அன்பாலே ஆண்டவரே எம்மை அழைத்தீரே இகமதில் பாவங்கள் பறந்தோட இயேசுவாய் மண்ணில் பிறந்தீரே
அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா ராஜனுக்கே
பிறவியில் நாமும் பாவியன்றோ-எம் பிழைதனை நீரும் பொறுப்பீரே பாவமில்லாத ஒரு உடல் எடுத்து-எங்கள் பாலகன் இயேசுவாய் வந்தவரே
நீதியின் தேவன் நீரன்றோ-வழி மாறிடும் நமக்கிங்கு ஆயனன்றோ தூயவரே உம் கருணையினை-நாம் துதிக்கின்ற வரம்தனைத் தந்துவிடும்
எமக்காய் மரித்த தேவனல்லோ-நீர் நமக்காய் உயிர்த்த தெயவமல்லோ பிறர்க்காய் வாழ்ந்திடு என்றவரே-நல்ல பேரின்பப் போதனை தந்தவரே