அலைக்கடல் மோதும் போது
alaikkadal modhum podhu
அலைக்கடல் மோதும் போது உந்தன் படகு சாயும் போது உன் கூக்குரல் கேட்க்கும் போது உன் பக்கம் வருகிறார்
பல்லவி
அவரே நம் இரட்சகர் அவரே நம் புகலிடம் அவரே நம் நங்கூரம் அவர் இயேசு
பெருங்காற்றும் கடலும் உன்னை அமிழ்த்தும் வேளையில் உந்தன் வாழ்க்கை படகு உடைந்து போகும் நிலைமையில் உன்னை காக்கும்படி அவர் பாதங்கள் முன் நின்றிடும் உன்னை தூக்கும்படி அவர் கண்கள் உன்னை நோக்கிடும்
பல்லவி
அவரே நம் இரட்சகர் அவரே நம் புகலிடம் அவரே நம் நங்கூரம் அவர் இயேசு
பயமும் திகிலும் உன்னை நெருக்கும் வேளையில் பெரும் அலைகள் உன்னை மூழ்க செய்யும் நேரத்தில் உன்னை மீட்கும்படி அவர் அற்புத கரத்தை நீட்டிடுவார் கடல் மேலே நடக்க தைரியம் உனக்கு தந்திடுவார்
பல்லவி
அவரே நம் இரட்சகர் அவரே நம் புகலிடம் அவரே நம் நங்கூரம் அவர் இயேசு
உந்தன் வாழ்க்கை காரிருளில் இருக்கும் வேளையில் உதவி செய்வோர் யாரும் இல்லா நிலைமையில் பாதை காட்டும் கலங்கரை விளக்காய் இருந்திடுவார் உந்தன் வாழ்க்கை படகை அக்கரையில் சேர்த்திடுவார்
பல்லவி
அவரே நம் இரட்சகர் அவரே நம் புகலிடம் அவரே நம் நங்கூரம் அவர் இயேசு