அக்கினிமயமானவரே
akkinimayamaanavarae
அக்கினிமயமானவரே ஆட்கொண்டு நடத்திடுவீர் உன்னத தேவனும் நீரே ராஜாதிராஜனும் நீர் செப்பனிட வாரும் ஐயா செம்மையாய் நடந்திடவே - 2
1. அபிஷேகியும் தேவா ஆவியின் வல்லமையால் - 2 ஆவியின் வரங்களினால் என்னை அபிஷேகியும் தேவா - 2
2. தேற்றரவாளனும் நீர் பரிசுத்த ஆவியும் நீர் - 2 சாட்சியாய் வாழ்ந்திடவே என்னை அபிஷேகியும் தேவா - 2
3. பரலோக அக்கினியே பலிபீட அக்கினியே - 2 பரிசுத்தமாக்கிடவே என்னை அபிஷேகியும் தேவா - 2