அக்கினி சூளையை
akkini soolaiyai
அக்கினி சூளையை கடக்கப் பண்ணினவர் ஆழியின் தண்ணீரை கடந்திடச் செய்தவர் இயேசு உயிரோடிருப்பதினால் என்றும் எதற்கும் பயமில்லையே பயமில்லை (2) பயமில்லையே - 2 இயேசு உயிரோடிருப்பதினால் என்றும் எதற்கும் பயமில்லையே - 2
1. உன்னோடு நான் இருந்து செய்யும் காரியம் மிகவும் பயங்கரமாயிருக்கும் நீ விசுவாசித்தால்(3) தேவ மகிமை காண்பாய் நீ விசுவாசித்தால்(3) உன்னால் எல்லாம் கூடும் இயேசு உயிரோடிருப்பதினால் என்றும் எதற்கும் பயமில்லையே - 2 (பயமில்லை…..)
2. உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் உண்மையுள்ளவர் ஒருபோதும் உன்னை கைவிடமாட்டார் நீ காத்திருந்தால் (3) காரியம் வாய்க்கச்செய்வார் நீ காத்திருந்தால் (3) உன் விருப்பம் நிறைவேற்றுவார் இயேசு உயிரோடிருப்பதினால் என்றும் எதற்கும் பயமில்லையே - 2 (பயமில்லை…..)
3. உவர்ப்பை செழிப்பாய் மாற்றிடுவார் மாராவை மதுரமாய் ருசிக்கச்செய்வார் உன்னை நடத்திடுவார் உன்னை காத்திடுவார் உன்னை உயர்த்திடுவார் சாத்தானை மிதித்திடுவார் இயேசு உயிரோடிப்பதினால் என்றும் எதற்கும் பயமில்லையே - 2 (பயமில்லை…..)