அக்கினி ஜுவாலையாக்கும் தேவா
akkini juvaalaiyaakkum devaa
அக்கினி ஜுவாலையாக்கும் தேவா கொளுந்து விட்டெறிய ஊற்றும் தேவா பாவம் நெருங்கா அக்கினியால் சாத்தானை ஜெயிக்க உதவும் தேவா
அல்லேலூயா பாடுவோம் - 4
1. எலியாவின் அக்கினி இறங்கட்டுமே வானம் திறந்து பொழியட்டுமே கர்த்தரே தேவனென்று அறியட்டுமே சாத்தானின் சதிகள் சரியட்டுமே
2. பாவத்தின் கரைகள் நீங்கட்டுமே சாபத்தின் நுகங்கள் முறியட்டுமே இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தேர வெற்றியின் கீதங்கள் பாடிடுமே