அக்கினி அபிஷேகம் தந்து
akkini abishegam thandhu
அக்கினி அபிஷேகம் தந்து ஆவி பொழிந்திடும்
1. சுட்டெரிக்கும் நல் அக்கினி சுத்திகரிக்க எம்மையும் குற்றங்குறைகள் மற்றுங் கறைகள் முற்றிலும் நீக்கிடுமே - எம்மில் - அக்கினி
2. பற்றினதே வான் அக்கினி பக்தன் எலியா கூப்பிட வேண்டுதல் கேட்டு வானந் திறந்து வல்லமை ஊற்றிடுமே - இன்று - அக்கினி
3. மோசேயுங் கண்ட அக்கினி முட்செடி மேலே பற்றிட அற்புத காட்சி தற்பரன் மாட்சி அண்டிட தந்திடுமே அதை - அக்கினி
4. நாதாப் அபியூ அக்கினி நாடி அழிந்தால் நஷ்டமே அந்நிய தீயை பட்சிக்கும் தேவ ஆவியே வந்தாளும் - நல்ல - அக்கினி
5. மேலறை வந்த அக்கினி சீஷரை அன்று சந்திக்க பற்பல பாஷை பேசி மகிழ்ந்த பக்தி வரம் தாரும் - தேவ - அக்கினி
6. இரண்டு மடங்கு அக்கினி இந்த கடைசி நாட்களில் மாம்சமான யாவரின் மேலும் மாரியுடன் பொழியும் - பின் - அக்கினி