அக்கினி அபிஷேகம் ஈந்திடும்
akkini abishegam eendhidum
அக்கினி அபிஷேகம் ஈந்திடும் தேவ ஆவியால் நிறைத்திடும் தேவா தேவா இக்கணமே ஈந்திடும்
பரமன் இயேசுவை நிறைத்தீரே பரிசுத்த ஆவியால் நிறைத்திடும் உந்தன் சீஷருக்களித்தீரே அன்பின் அபிஷேகம் ஈந்திடும்
சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும் தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே இரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்
அன்பர் இயேசுவின் நாமத்திலே வன் துயர் பேய் பிணி நீங்கவே அற்புதம் அடையாளம் நிகழ்ந்திடவே பொற்பரன் ஆவியால் நிறைத்திடும்
வானில் இயேசு வருகையிலே நானும் மறுரூபம் ஆகவே எந்தன் சாயல் மாறிடவே மைந்தன் ஆவியால் நிறைத்திடும்
மீட்பர் இயேசுவின் வருகையிலே நானும் அவரைப் போல் இருக்கவே மீட்பின் நாளுக்கு முத்திரையாய் பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C G C C G C C G F C Dm G C C F C Am G F C C F Em Am G F C C F C Am G F C C F Em Am G F C C F C Am G F C C F Em Am G F C