ஐயா கொல்கதா மலை நாதா
aiyaa kolgadhaa malai naadhaa
ஐயா! கொல்கொதா மலை நாதா எனக்கார் துணை சொல்லும் அனுகூலா.
மெய்யாய்! இது தருணம் நேராய் இச்சிறியோன் முகத்தைப் பார்க்க வாரும்
1. பாறைக்குள் தேரை போலானேன் - நான் பல துயர் பட்டவனானேன் ஆலைக்குள் கரும்பு போலானேன் இந்த அகதிக்குன் முகம் காட்ட வாரும்.
2. பலரும் பலவும் சொல்லி ஏய்த்து எனை அலைவாய் துரும்பு போல் ஆய்த்து தொலையாத கவலைக்குள் மாய்த்து தூரத் துரத்தி விட்ட கதியைப் பார்த்து.