அகிலமும் படைத்த என் தேவா
agilamum padaitha en devaa
அகிலமும் படைத்த என் தேவா உம் வார்த்தை மாறாததே - 2 உம் கிருபையின் வாக்குகள் யாவும் என் வாழ்வில் நிறைவேறுதே - 2 என் வாழ்வில் நிறைவேறுதே
1. துன்பங்கள் எல்லாம் இன்பமாய் மாறும் வெட்கங்கள் எல்லாம் கனமாகும் தீமைகள் எல்லாம் நன்மையாய் மாறும் பெலவீனங்கள் பெலனாகும் - 2
நீர் ஒரு வார்த்தை சொன்னாலே போதும் என் வாழ்க்கையில் எல்லாமே மாறும் - 2
மாறும் எல்லாம் மாறும் என் இயேசுவின் இரத்தத்தாலே மாறும் எல்லாம் மாறும் என் இயேசுவின் நாமத்திலே
2. அந்தகாரங்கள் விலகியே ஓடும் கட்டுகள் எல்லாம் உடைந்து விழும் சாபங்கள் எல்லாம் கிருபையாய் மாறும் நோய்களெல்லாம் குணமாகும் - 2
3. வறுமை எல்லாம் செழிப்பாய் மாறும் தடைகள் எல்லாம் படிகளாகும் குறைகள் எல்லாம் நிறைவாய் மாறும் தேவைகள் எல்லாம் நிறைவேறும் - 2