அகவிருந்தாக என்
agavirundhaaga en
அகவிருந்தாக என் இறைவா வா - மனம் மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா (2)
1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே - திரு ஆகமம் முழங்கிடும் உயிர்மொழியே (2) உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் - 2 எமை உமதுடலென நீ மாறவைத்தாய் - 2
2. தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால் எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் (2) உமையடைந்திட யாம் தகுதியற்றோம் - 2 இனி உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம்