அடோனாய் அடோனாய் என் தேவனே
adonaay adonaay en devanae
அடோனாய் அடோனாய் என் தேவனே என்றென்றும் என் வாழ்வின் எஜமானனே
உம் அருகில் நான் இருக்க உம் தோளில் சாய்ந்திருக்க தனிமையை மறந்திருப்பேன் நான் வலப்பக்கம் நீர் இருக்க வலக்கரம் துணை இருக்க உலகையே மறந்திருப்பேன் நான்
உடைந்து போவதில்லை யார் உதறித் தள்ளினாலும் உறுதியான கன்மலை (என்) உடன் இருக்கையிலே
என் துக்கம் நீர் அறிய என் பாரம் நீர் சுமக்க வேதனை மறந்திருப்பேன் நான் என் காயம் நீர் ஆற்ற என் வாழ்வை நீர் மாற்ற கடந்ததை மறந்திருப்பேன் நான்
சோர்ந்து போவதில்லை யார் வெறுத்துத் தள்ளினாலும் சேனைகளின் தேவன் என் உடன் இருக்கையிலே
என் துணையாய் நீர் இருக்க என் பெலனாய் நீர் மாற உயரே எழும்பிடுவேன் நான் என் வாழ்வில் நீர் பெருக அனுதினம் நான் சிறுக உம் சாயல் அடைந்திடுவேன் நான்
பிரிந்து போவதில்லை யார் எதிர்த்து வந்திட்டாலும் எனை ஆளும் தெய்வம் என் உடன் இருக்கையிலே