அடியோர் யாம் தரும்
adiyor yaam tharum
அடியோர் யாம் தரும் காணிக்கையை அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே ( 2 )
1. பாவியென்றெம்மைப் பாராமல் பாவத்தின் தீமையை அடையாமல் ( 2 ) பரிகாரம் என ஏற்றிடுவாய் பலியாய் எமை நீ மாற்றிடுவாய்
2. மேலொரு வாழ்வு உண்டு என்று - எம் மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் மேலும் துன்பங்கள் அடைந்தாலும் மேன்மையின் பலியாய்த் தருகின்றோம்
3. வாழ்வுக்கு ஒருநாள் முடிவு உண்டு - விண் வாழ்வுக்கு எமக்கென்று எது உண்டு ( 2 ) என் மனம் அறிந்ததன் பயன் என்னவோ எல்லாம் அறிந்தவர் நீரல்லவோ