அதிசயங்கள் செய்கிறவர் நம்
adhisayangal seygiravar nam
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்
தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம் - எகிப்து(2) வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் (2)
செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்(2) புயல் காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் (2)
குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்(2) ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் (2)
பாவியான என்னையும் உயர்த்தினார்அதிசயம்(2) ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம் (2)