அதிசயமே இயேசுவின் சிநேகம்
adhisayamae yesuvin sinegam
அதிசயமே இயேசுவின் சிநேகம் ! ஆனந்தமே ஆ அது தியானம் ! ஆழம், அகலம், நீளம், உயரம் அறிந்திடலாமோ? இப்பூவில் அறிந்துவிடலாம்
ஆ! என் மணாளா! உம் அன்பினால் நிறையுதே என் உள்ளம் இந்நேரம்!
மறந்து உம்மைத் தூரம் அகன்று அலைந்த என்னை மார்பில் அணைத்தார்! மகத்துவம் உம் நாமத்திற்கு இன்றும் என்றைக்கும் இப்பூவில்!
பாவம் நிறைந்த பாதகன் என்னைப் பாவம் நீக்கி பரகதி சேர்க்க பாதகன் போல பாரில் வந்தீர் பாதம் பணிவேன் நான் - என் தேவா'
மறந்தாலும் ஒரு தாயும் தன் மகனை மறப்பதில்லை ஓர் நாளும் நீர் என்னை வரைந்தீரே உன் உள்ளங்கையில் வாக்கு மாறாத மகேசன்
தளர்ந்த நேரம் திருக்கரங்களில் நீர் எடுத்துக் கன்மலை மேல் என்னை நிறுத்தி ஆதி அன்பின் ஆவி தந்து அருளும் ஈந்தீரே - என் மேலே
ஆனந்தமே இயேசுவின் சிநேகம் ஆருயிர் ஈந்த என் நாதன் ஆதியந்தம் இல்லா நீதன் ஆச்சரிய போதன் - என் காந்தன்
பாடிடுவோம் பாதமே பணிவோம் இயேசு ராஜனின் நாமமே ஓங்க, அன்பின் மலரும் தூவி துதிப்போம் இயேசு ராஜனை - இப்பாரில்