அதிசயமான தேவனே
adhisayamaana devanae
அதிசயமான தேவனே ஆலோசனை தரும் கர்த்தரே ஆசை உந்தன் மேல் மாத்திரம் உம் அன்புக்கீடேதுமுண்டோ
1. தந்தை போல் சுமந்தவரே - தாயின் கருவினில் காத்தவர் உம்மாலாகாத காரியம் ஒன்றுமில்லை உம்மை நம்பினோர் வெட்கியே போனதில்லை - அதிசயமான
2. நேசக்கொடி எந்தன்மேல் - வீசி பாசமாய்ப் பறந்திடுதே நீசன் என்னையும் பேர்சொல்லி அழைத்தீரன்றோ? நித்தம் கிருபையினால் முடிசூட்டிடுவீர் - அதிசயமான
3. உலகில் உள்ளவனிலும் - என்னில் இருப்பவர் பெரியவரே உந்தன் வல்லமையால் ஜெயம் பெற்றிடுவேன் கர்த்தர் என் முன்னே செல்வதால் கலங்கிடாதே - அதிசயமான
4. குயவன் கை களிமண் போல் - தேவா! உம்மிடம் ஒப்புவித்தேன் உந்தன் மனதின்படி என்னை வனைந்திடும் எஜமானனே உமக்கு நான் அடிமை யன்றோ! - அதிசயமான
சீயோனில் வாசம் செய்யும் எந்தன் இயேசுவை அடைந்திடவே ஆசையாய் இலக்கை நோக்கி ஓடிடுவேன் வேகம் பந்தயப்பொருள் போற்றிடுவேன் - அதிசயமான