அதிகாலையில் விழித்தெழும்பு
adhigaalaiyil vizhithezhumbu
1. அதிகாலையில் விழித்தெழும்பு மகிபன் இயேசுவை போற்றுவோம் ஆவியில் உற்சாகமாக அன்பரின் பாதம் வணங்கி ஆத்தும நல் நேசரை புகழ்ந்து போற்றுவோம்
2. காலை தோறும் புதியது கிருபை என்றும் பெற்றிட களித்துமே இம் மேதினில் ஜீவ பாதை ஓடிட காட்சியாய் மின் மாட்சியாய் நாம் துதித்துப் போற்றுவோம்
3. மரியாளைப் போல் உள்ளம் கனிந்த அதிகாலையில் தேடினால் பிரியமாகக் காட்சி தந்து அக மகிழச் செய்வார் புகழ்ந்து மே அகமகிழ்ந்து மே என் நேசர் என்போம்
4. கண்டிடுவோம் காலை தனில் கருத்துடனே தேடினால் கண்டனரே காலையில் எம் முன்னோர்களும் தேடியே மகிழ்ந்தனர். அவர் புகழ்ந்தார், பரண் பாதம் பணிந்தேன்
5. வழி இதிலே நடவும் இதில் எனவே அன்பன் பேசிடும் இன்பமான வாக்கைக் கேட்டு இன்ப கானான் செல்லவே விழித்துமே உள்ளம் மகிழ்ந்து மே யாம் துதித்துப் போற்றுவோம்
6. துதர்களும் கேருபீன்கள் சேராபீன்கள் சேர்ந்துமே தூயர், தூயர், தூயர் என்று துதித்துப் புகழ்ந்து ஏத்தி தூயரை நல் நேயமாகப் பணிந்து நிற்கவே
7. துதித்திடுவோம் நேசரையே துதித்தல் இன்பமானதா துதியால் அவர் வாசம் செய்து துதியின் பிரியம் கொள்ளவே ஸ்தோத்திர நற்பாத்திரரைத்துதித்துப் போற்றுவோம்