அதிகாலையில் தினம் தேடினால்
adhigaalaiyil thinam thedinaal
அதிகாலையில் தினம் தேடினால் உம்மை கண்டடைவார்கள் தேவா ஆராதனையில் துதி பாடினால் சுகம் அடைந்திடுவார்கள் தேவா
துதிக்குப் பாத்திரரே தூயாவியே - 2 ஆராதிக்கும் தேவன் இயேசு ஒருவரே - 2
1. இரவொன்று வந்து பகலென விடிவது இறைவா உம் அற்புதமே உறங்கிடும் மனிதர்கள் மறுநாள் விழிப்பது தேவா உம் சித்தமே இருளினை நீக்கும் வெளிச்சமும் நீரே இணையில்லா பேரொளியே உம் பாசத்தை/இரக்கத்தை தேடி விழைந்திடுவோர்க்கு குறைவில்லா உம் கிருபையே
2. கர்த்தரை ருசித்து பார்ப்பவர்க்கெல்லாம் கசப்பும் இனிப்பாகுமே கர்த்தரின் மேலே பிரியமாய் இருந்தால் கவலைகள் பறந்தோடுமே காலமே எழுந்து ஞானமாய் ஜெபித்தால் கேட்பது ஜெயமாகுமே வாழ்நாள் முழுவதும் வேதத்தை வாசித்தால் வல்லமை உன்னை சூழுமே
3. நித்திய ஜிவ வழியினிலே நீ நடந்திட வகைதேடு சத்திய வேத வார்த்தையை கேட்டு சாட்சியாய் நடமாடு நிம்மதி தந்திடும் நீதியின் தேவனின் அன்பினில் உறவாடு நிரந்தர சொந்தம் இயேசுவை நாடி நன்மையால் முடிசூடு - நீ
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D
C D Em
D
C D Em
(Em) D(Dm) C
D Em
B
Em C
D Em
G
Em
D B
Em
B
Em C
D Em
G
Em
D B
Em