அதிகாலைப் பொழுதில்
adhigaalaip pozhudhil
அதிகாலைப் பொழுதில் என் சிரசினைத் தாழ்த்தியே - என் சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்
விடிவெள்ளி கண்டு என் இரு கண்கள் பனித்திட - என் சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்
இளந்தென்றல் வீசிட என் இதயங்கனிந்திட - என் சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்
பறவைகள் பாடிட என் பரமரை நினைத்து - என் சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன் சிருஷ்டிகள் யாவுமே
சிருஷ்டிகள் யாவுமே என் தேவனைத் துதித்திட - என் சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்
சிலுவையின் அன்பு சகல சிருஷ்டியின் மீட்பு - என் கல்வாரி அன்பே உம்மைத் துதிப்பேன்
என் உடல் பொருள் ஆவியை உம் சொந்தமாய் தந்தேன் - என் சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்